இன்று நடைபெற்ற மக்கள் மன்ற கூட்டம்..31 புகார்களுக்கு உடனடியாக தீர்வு!
![]()
புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இன்று நடைபெற்ற மக்கள் மன்ற கூட்டத்தில் 31 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
மூத்த அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டு 52-புகார்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அதில் 31புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.
இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 128 பொதுமக்கள் (19 மகளிர்) கலந்துகொண்டனர்.
பெரும்பாலான புகார்களுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணத்தை உறுதி செய்தனர்.
நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக காவல் நிலைய அதிகாரிகளுக்கு (SHOS) மூத்த அதிகாரிகள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

