முதல் மக்கள் சந்திப்பு திட்டம்..விஜய் சாதிப்பாரா?
த.வெ.க.வின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசும்போது பாஜக, அதிமுக ,திமுக கட்சிகளை கடுமையாக விமர்சனம் செய்தார். இது தமிழக அரசியலில் பெரும் விமர்சனத்தை பெற்றது. இதை எடுத்து விஜயின் பேச்சுக்கு பல்வேறு தரப்பிலும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர்.இந்தநிலையில்
விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது.
த.வெ.க. தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி நகர தொடங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து மக்கள் சந்திப்பை நடத்த அக்கட்சி தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார். த.வெ.க.வின் கொள்கை தலைவரான தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி, ஈரோட்டில் இருந்து முதல் மக்கள் சந்திப்பை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்காக மாவட்ட செயலாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், பனையூரில் உள்ள த.வெ.க. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்க உள்ளது. இதில் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் டெல்டாவையொட்டியுள்ள மாவட்டங்களை சேர்ந்த செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். தொடர்ந்து மற்ற மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.அதன்பிறகு விஜய் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயண விவரம் குறித்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.