24 மணி நேரம் வீணாகும் குடிநீர்..கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்!

Loading

குடிநீர் தொட்டிக்கு செல்லும் முக்கிய குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் 24 மணி நேரம் வீணாகுகிறது.இதற்கு நடவடிக்கை எடுக்க ராணிப்பேட்டை நகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்!

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட காரை 17 வது வார்டில் 24 மணி நேரமும் குடிநீர் வீணாக நிலத்தில் சென்றடைகிறது. அங்கு தேங்கி நிற்கும் குட்டையில் இயற்கை உபாதைகள் கழித்து சுத்தம் செய்து கொள்ள அந்த பகுதியாக மாறியுள்ளது. மேலும் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து வெளியேறும் நீர் கலந்து கொசுக்களுடன், நோய் தொற்று ஏற்படும் அவலத்தில் உள்ளது.

ராணிப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட காரை 17 வது வார்டு பகுதியில் சுடுகாடு ரோடு காரிய மேடை எதிரில் சுமார் 2 ஆண்டு காலமாக குடிநீர் தொட்டிக்கு செல்லும் முக்கிய குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது தொடர்பாக பொதுமக்கள் பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளதாகவும், ஊர் நாட்டாமை சார்பாகவும் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

0Shares