கல்வீடு கட்ட தவணைத் தொகை..சிவா MLA வின் முயற்சி வெற்றி!
வில்லியனூரில் 58 பயனாளிகளுக்கு கல்வீடு கட்ட தவணைத் தொகைக்கான ஆணைஎதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார்.
புதுச்சேரி அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் பெருந்தலைவர் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் 2010–11–ஆம் ஆண்டு முதல் தவணைத் தொகை பெற்று வீடு கட்டியவர்களில், 58 பயனாளிகள் இரண்டு மற்றும் மூன்றாம் தவணைத் தொகை பெற தகுதி உடையவர்கள் என அரசால் நியமிக்க கமிட்டி உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விடுபட்ட இரண்டு மற்றும் மூன்றாம் தவணைத் தொகை ரூ. 17 லட்சத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு, 58 பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கான அரசாணை மற்றும் தவணைத் தொகைக்கான அடையாள அட்டையை வழங்கினார்.
இதில், குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் அனில் குமார், கள ஆய்வாளர் இளங்கோவன், தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், விவசாய அணி அமைப்பாளர் குணசேகரன், தொமுச தலைவர் அங்காளன்,வர்த்தக அணி துணை அமைப்பாளர் சரவணன், விவசாய அணி துணை அமைப்பாளர் கோபி, காசிநாதன் , ஆதிதிராவிடர் அணி துணை அமைப்பாளர் காளி, ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் கதிரவன், தொகுதி துணை செயலாளர்கள் ஹரி கிருஷ்ணன், ஜெகன்மோகன், பொருளாளர் கந்தசாமி, தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் கேவியர் ஏழுமலை கிளைக் கழக நிர்வாகிகள் மிலிட்டரி முருகன், சபரிநாதன், ராஜி, முருகேசன், ரவி, சரவணன், நடராஜன், சுரேஷ், அன்பு, கார்த்திகேயன், சொக்கலிங்கம், ராமஜெயம், கோவிந்தராஜ், பூபாலன், கோபி, கோதண்டம், அன்பு, விந்தியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.