இன்று ஆவணி அமாவாசை..மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம் எப்போ தெரியுமா?

Loading

ஆவணி மாத அமாவாசை ஆகஸ்ட் 22 ஆம் தேதி இன்று வெள்ளிக்கிழமை காலை 11:55 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 23 ஆம் தேதி நாளை காலை 11:35 மணிக்கு முடிவடைகிறது.

இந்து மதத்தில், ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை திதிக்கு முக்கியத்துவம் உண்டு. ஆவணி அமாவாசையில் அளிக்கப்படும் தானம் மிகப் பெரிய புண்ணியத்தை பெற்றுத் தரும்.அந்த வகையில், ஆவணி மாதம் வரும் அமாவாசை, பாத்ரபாத அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது குஷாக்ரஹானி அமாவாசை அல்லது பித்தோரி அமாவாசை என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த நாளில், மூதாதையர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் செய்வது மட்டுமில்லாது, குழந்தைகளுக்காக வேண்டுவதும், தானம் வழங்கினால் .மிகப் பெரிய புண்ணிய பலனும், முன்னோர்களின் ஆசிகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நாட்காட்டியின்படி, ஆவணி மாத அமாவாசை ஆகஸ்ட் 22 ஆம் தேதி இன்று வெள்ளிக்கிழமை காலை 11:55 மணிக்குத் தொடங்கி, ஆகஸ்ட் 23 ஆம் தேதி நாளை காலை 11:35 மணிக்கு முடிவடைகிறது.

எல்லா அமாவாசை அன்றும் தர்ப்பணம் செய்வது போல, ஆவணி அமாவாசை அன்று புனித நதியில் நீராடுவதும், தானம் செய்வதும் இந்த நாளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அதிகாலையில் எழுந்து, புனித நதியில் அல்லது வீட்டில் கங்கை நீரைத் தண்ணீரில் கலந்து குளித்த பிறகு, சூரிய பகவானுக்கு நீர் அர்ப்பணித்து, கருப்பு எள்ளை ஓடும் நீரில் ஊற்றவும். முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய தர்ப்பணம் மற்றும் பிண்டதானம் செய்ய வேண்டும்.

ஆதரவற்றோர் அல்லது ஏழை எளியோருக்கு உணவு, உடைகள், காலணிகள், செருப்புகள் மற்றும் தட்சிணையை தானம் செய்வது மிகவும் புண்ணியமானது.கால்நடைகளுக்கு உணவு அளிப்பது, கால்நடைகளை பராமரிப்பவர்களுக்கு உதவி செய்வது போன்றவை செய்வதும் புண்ணியம் தரும்.

0Shares