சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை..அதிகாலையிலேயே மக்களின் மனங்களை குளிர்வித்த மழை!
கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வெளுத்துவங்கிய நிலையில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே மிதமான மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பெய்யும் என என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த மழை இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.
கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வெளுத்துவங்கிய நிலையில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, மெரினா உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.இந்த மழையால் சென்னை மக்கள் மனங்களை மகிவித்துள்ளது.தலைநகர் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டுள்ளது.
23-08-2025 நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.