திருமலை பிரம்மோற்சவ விழா.. பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கும் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு!
திருமலை பிரம்மோற்சவ விழாவில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கிறார்.இதனை முன்னிட்டு பக்தர்கள் சிரமம் இன்றி வாகன சேவைகளை எளிதில் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு வெளி மாநிலங்கள் அல்லது வெளிநாட்டினரும் திரும்ப திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடிக்கடி திருவிழாக்கள் நடைபெறுவது பௌர்ணமி விழா என பல்வேறு விழாக்கள் இங்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஒரு நடைபெறும் பிரமோற்சவ விழா ஆனது நடைபெற உள்ளது .இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழா சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்தநிலையில் பக்தர்கள் சிரமம் இன்றி வாகன சேவைகளை எளிதில் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை கோவில் நான்கு மாட வீதிகளில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஜெ.ஷியாமள ராவ், கூடுதல் அதிகாரி வெங்கைய சவுத்ரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷவர்தன் ராஜு மற்றும் முரளிகிருஷ்ணா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, பக்தர்கள் சிரமம் இன்றி வாகன சேவைகளை எளிதில் காணும் வகையில் ஏற்பாடுகள் செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
மேலும், செப்டம்பர் 24-ந் தேதி முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். பிரம்மோற்சவ நாட்களில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.கேலரிகளில் இருக்கும் ஒவ்வொரு பக்தருக்கும் அன்னபிரசாதம் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.