அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் சங்க ஆலோசனைக் கூட்டம்!
அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர் சங்கத்தின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டியில் நடைபெற்றது.
பண்ருட்டி ஸ்ரீ மீனா மஹாலில் அனைத்திந்திய பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் கடலூர்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேசியத் தலைவர் டாக்டர்.S. இராஜேந்திரன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் ஷேக் நூர்தீன் அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் ஜோதி நரசிம்மன் தென் சென்னை மாவட்ட தலைவர் தமிழன்(எ) காமராஜ் சென்னை பெருமாள் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்டச் செயலாளர் ஸ்டீல் ரவி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம் மாவட்ட துணை செயலாளர் அருண்குமார் மாவட்ட பொருளாளர் சுதாகர், மாவட்ட துணை தலைவர் பாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்தன கோபி, சங்கர் கணேஷ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு சங்க வளர்ச்சிகள் மற்றும் பத்திரிகையாளர்களின் உரிமைகளையும் அரசு வழங்கும் சலுகைகளையும் அது சம்பந்தமாக அனைவரும் கலந்து பேசப்பட்டது.
புதிதாக சங்கத்தில் ராஜதுரை கோபால் சிலம்பு ஆகியவர்கள் தேசிய தலைவர் முன்னிலையில் சங்கத்தில் இணைத்துக் கொண்டார்கள் அனைவருக்கும் சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. சங்கத்தின் மாநாடு விரைவில் நடத்தவும் தமிழக அரசு பத்திரிக்கை நல வாரிய உறுப்பினர் அனைவரையும் இணைக்கவும் தாலுக்கா செய்தியாளர்களுக்கும் தமிழக அரசு நலத்திட்டங்கள் வழங்க வேண்டும் எனவும் பல்வேறு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைவர் சங்கத்தின் செயல்பாடுகள் சிறப்பாக செய்வது சம்பந்தமாக பல கருத்துக்களை வழங்கினார்.இக்கூட்டத்தில் ஜோதி நரசிம்மன் அவர்கள் மகளுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இறுதியில் கடலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருணாச்சலம் அனைவருக்கும் நன்றி கூறினார்.