ராஷ்மிகாவின் ”ஹாரர்” படம்…டீசர் வெளியானது!

Loading

ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார்.

இதுவரை ஹாரர் படத்தில் நடிக்காத நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது அதன் பக்கம் திரும்பி இருக்கிறார். அதன்படி, அவர் நடிக்கும் முதல் ஹாரர் படத்தை ஸ்ட்ரீ, முஞ்யா உள்ளிட்ட ஹாரர் படங்களை தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு ‘தாமா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடிக்கிறனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

0Shares