இன்றைய ராசிபலன் – 14.08.2025

Loading

இன்றைய ராசிபலன் – 14.08.2025

ராசிபலன்:-

மேஷம்

இன்று உங்கள் முயற்சிகள் பலனளிக்கும் நாள். பணியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நவீன வாகனம் வாங்க லோன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இரவு நேர பயணத்தின்போது அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நண்பர்களின் ஆதரவு உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

ரிஷபம்

இன்று பணவரவு அதிகரிக்கும். புதியவர்களின் அறிமுகம் நன்மையில் முடியும். மாணவர்களின் தேவை பூர்த்தியாகும். எதிர்காலத்திற்கென சேமிக்க துவங்குவீர்கள். சொத்து தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும். உடலில் சோர்வு குறையும். உங்கள் திட்டங்களை செயல்படுத்த உகந்த நாள். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

மிதுனம்

இன்று தங்கள் அலுவலகத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியமும், மதிப்பும் கிடைக்கும். வேலைப்பளு அதிகரித்தாலும் மனநிறைவு உண்டாகும். அனாவசிய செலவுகளை குறைப்பது நல்லது. தொழில் அதிபர்கள் முதலீட்டினை அதிகரிப்பர். பணவரவு சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கடகம்

இன்று மனதில் இருந்த வேலைகள் நிறைவேறும். ஆண்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் நேரம் செலவிடுவீர்கள். உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. பணநெருக்கடி குறையும். சக ஊழியர்களிடம் முன் கோபத்தை தவிர்க்கவும். தாயின் உடல் நலம் சீரடையும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

சிம்மம்

இன்று வியாபாரத்தில் உங்களின் பேச்சால் வாடிக்கையாளர்களை கவர முடியும். பணியில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாடு தொடர்பான வாய்ப்பு வரும். நண்பர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படவும். உடல் நலம் சீராக இருக்கும். மாணவர்கள் நன்கு படிப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கன்னி

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

துலாம்

இன்று பணவரவு மேம்படும். வீட்டில் மகிழ்ச்சி நிலைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொடர்புகள் கிடைக்கும். மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலில் வளர்ச்சி உண்டு. ஆன்மீக சுற்றுலா சென்றுவருவீர்கள். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். உடலில் சிறு சோர்வு ஏற்படலாம்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

விருச்சிகம்

இன்று உழைப்பின் பலன் அதிகம். அரசியல்வாதிகளுக்கு புகழ் ஓங்கும். வழக்கு வெற்றி காணும். உடல் நலம் மேம்படும். வேலைப்பளு இருந்தாலும் திருப்தி கிடைக்கும். ஆரோக்கியம் பராமரிக்கவும். பணவரவு உயர்வு உண்டு. குடும்பத்துடன் நல்ல நேரம் செலவிடுவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

தனுசு

இன்று கலைஞர்களின் கனவு நனவாகும். வெளி நபர்களிடம் எச்சரிக்கை தேவை. பயண வாய்ப்பு உண்டு. நண்பர்களுடன் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தொழிலில் சிறிய மாற்றங்கள் வரும். நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும். உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

மகரம்

இன்று உங்கள் செயல்கள் பாராட்டப்படும். பணியில் முன்னேற்றம் உண்டு. சொத்து தொடர்பான சந்தர்ப்பம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். உடல் நலம் மேம்படும்.

அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்

கும்பம்

இன்று உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். தொழிலில் புதிய வாய்ப்புகள் வரும். பணவரவு சீராக இருக்கும். புதிய நண்பர்கள் மற்றும் தொடர்புகள் உருவாகும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். குடும்பத்துடன் நல்லுறவு நிலைக்கும். ஆரோக்கியத்தை கவனிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

மீனம்

இன்று மனதில் இருந்த விருப்பம் நிறைவேறும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிரலாம். நண்பர்களுடன் மகிழ்ச்சியான நேரம் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டு. பணவரவு மேம்படும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். உடல் நலம் சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

0Shares