ஆடிக் கிருத்திகை முன்னேற்பாடு பணிகள்..திருத்தணி கோவிலில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் ஆய்வு!
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுவது வழக்கம்.அந்தவகையில் இந்த ஆண்டுக்கான ஆடிக் கிருத்திகை திருவிழா நடைபெறுள்ளது.இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றுவருகிறது.இந்தநிலையில்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை திருவிழாவை முன்னிட்டு சரவணப் பொய்கை, நல்லாங்குளம்,நல்லாங்குளம்,அருகிலுள்ள பக்தர்கள் செல்லும் படிக்கட்டு பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் திருக்கோயில் இணை ஆணையர் ரமணி, திருக்கோவில் அறங்காவல் உறுப்பினர்கள் சுரேஷ் பாபு, திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.