விடுமுறை எதிரொலி.. விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்வு..பயணிகள் அதிர்ச்சி!

Loading

தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் உள்நாட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது.

நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது .நாடு முழுவதும் நாளை சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. குறிப்பாக நாளை சுதந்திர தினம் நாளை மறுநாள் சனிக்கிழமை அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருகிறது, தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பலர் தென் மாவட்டங்களில் உள்ள பலர் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி வருகின்றனர்.

முக்கியமாக ஊர் பகுதிகளில் ஆடித் திருவிழா நடந்து வருவதால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். அதாவது சாதாரண நாட்களை சென்னையிலிருந்து திருநெல்வேலி,மதுரை ,நகர்க்கோவில் போன்ற பகுதிகளுக்கு செல்ல இரண்டு மடங்குக்கு மேலாக ஆம்னி பஸ் கிளீன் டிக்கெட் விலை உயர்ந்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர.

இந்த நிலையில், தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் உள்நாட்டு விமான கட்டணங்கள் பலமடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சிக்கு சாதாரண நாட்களில் ரூ.1,827ஆக இருந்த விமான கட்டணம் ரூ.14,518 ஆகவும், கோவைக்கு ரூ.3,818ல் இருந்து ரூ.15,546 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னை – மதுரை செல்லும் விமான கட்டணம் ரூ.4,000 ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.13,000 வரை உயர்ந்துள்ளது.

சென்னையில் இருந்து மதுரை, சேலம், திருச்சி, கோவைக்கு செல்லும் விமான டிக்கெட் கட்டண உயர்வால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.தொடர் விடுமுறை போன்ற நாட்களில் இதுபோன்று விமான டிக்கெட் கட்டண உயர்வால் பயணிகள் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

0Shares