திருத்தணி முருகன் கோவில் ஆடிக் கிருத்திகையை திருவிழா..முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக் கிருத்திகையை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக் கிருத்திகையை திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், திருக்கோயில் இணை ஆணையர் ரமணி, வேலூர் மண்டல இணை ஆணையர் தி.அனிதா, திருத்தணி சரகம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுபம் திமான், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் நாகர்கோவிலிலில் நடைபெற்ற வேலை வாய்ப்பு பெறுவதற்கான கருத்தரங்கில் சரியான வழி முறையில் திறமைகளை வளர்த்து கொண்டு எளிய முறையில் வேலை வாய்ப்பு பெறுவது எப்படி என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலில் வடசேரி சாய் கல்வி மையம் சார்பில் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு பெறுவதற்கான கருத்தரங்கு நாகர்கோவிலில் வைத்து நடைபெற்றது. இதில் சாய் கல்வி மைய இயக்குநர் சுப்பிரமணியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தற்போதைய காலகட்டத்தில் வேலை வாய்ப்புகள் அதிகம் இருந்தும் வேலையில் இருப்போர் போதிய சம்பளம் இன்றி கவலையில் பணிபுரிவதை பார்க்க முடிகிறது. இதனை போக்கிடவும் வேலை தேடுவோர்க்கு சரியான வழி முறையில் திறமைகளை வளர்த்து கொண்டு எளிய முறையில் வேலை வாய்ப்பு பெறுவது எப்படி என்பதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் பல்வேறு வயதுக்கு உட்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.