இனி விவேகானந்தர் மண்டபம் செல்லஆன்லைனில் முன்பதிவு!
விவேகானந்தர் மண்டபம் செல்ல ஆன்லைனில் பயணச்சீட்டு முன்பதிவு முறையை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் சிலை, விவேகானந்தர் மண்டபம் ,காந்தி மண்டபம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக குமரி கடலில் அதிகாலை சூரிய உதயம் காண்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பணிகள் அங்கு வருகை தருவார். அந்த வகையில் சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்றும் பொது விடுமுறை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு கூடுவர். விவேகானந்த மண்டபத்துக்கு செல்வதற்காக படகு பயணமும் உள்ளது. கட்டண முறையில் அங்கு பயணம் செய்து அந்த அழகை ரசிக்கலாம். இந்த நிலையில் திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்ப்பது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இந்த படகில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணச்சீட்டு பெறும் முறை நேற்று முதல் தொடங்கப்பட்டது. பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதியை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், சுற்றுலா பயணிகள் www.psckfs.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக நுழைவு சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்தவர்களுக்கு செல்போனில் பயணத்திற்கான நாள், நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 600 பேர் ஆன்லைன் மூலம் பயணச்சீட்டு பெற்று படகில் பயணம் செய்யலாம் என்றார்.