வேலை நிறுத்த போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு!
புதுச்சேரி அரசின் PRTC போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் RP.சந்திரமோகன் அவர்கள் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் திரு இரா.கமலக்கண்ணன் அவர்கள் பேசுகையில் ஆளும் என் ஆர் பாஜக கூட்டணி அரசின் முதலமைச்சர் ஐயா திரு N.ரெங்கசாமி அவர்கள் சட்டசபையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்படும் என அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி PRTC போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளான 10 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் நிரந்தர ஊழியர்களுக்கு 7th Pay commission அமுல்படுத்த வலியுறுத்தியும் கடந்த 12 நாட்களாக புதுச்சேரி காரைக்கால் மாகி ஏனாம் பகுதிகளை சேர்ந்த அனைத்து நிலை ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தர மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை இந்த அரசு இதுவரை கண்டு கொள்ளாமல் மௌனம் சாதித்து வருகிறது.
போராட்டம் நடத்தக்கூடிய ஊழியர்களை துறை சார்ந்த அதிகாரிகளோ அமைச்சர்களோ இதுவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஊழியர்களின் இந்த நியாயமான போராட்டத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிப்பதோடு மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கின்ற இந்த நிலை தொடர்ந்தால் காங்கிரஸ் கட்சி வீதியில் இறங்கி போராடும் என முன்னாள் அமைச்சர் திரு இரா.கமலக்கண்ணன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தார்கள்.