ஆண் நண்பர்களை மயக்கி உல்லாசம்…தொழிலதிபரிடம் நகை திருடிய தோழி சிக்கினார்!
ஆண் நண்பர்களை மயக்கி அவர்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டு இதுபோல் பணம், நகையை பறிப்பதை தீபிகா வழக்கமாக செய்து வந்ததாகவும்,போலீசார் தெரிவித்தனர்.
சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான மணி சமீபத்தில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அவருடன் தோழி தீபிகாவும் தங்கி இருவரும் ஒன்றாக மது அருந்தியதாக தெரிகிறது. போதை மயக்கத்தில் மணி தூங்கிவிட்டநிலையில் தோழி தீபிகாவை காணவில்லை.
அப்போது மணியின் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச்சங்கிலியும் திருட்டு போய் இருந்தது. இதுதொடர்பாக மணி தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் சபரிதாசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்தார்.
விசாரணையில் மணியுடன் ஓட்டல் அறையில் தங்கி இருந்த அவரது தோழி தீபிகாதான் நகையை திருடி சென்றது தெரியவந்தது.தீபிகாவை தனிப்படை போலீசார் தேடி வந்த நிலையில் குன்றத்தூரில் வைத்து நேற்று தீபிகாவை அதிரடியாக கைது செய்தனர். மணியிடம் திருடிய 10 பவுன் தங்கச்சங்கிலியை தீபிகா விற்றுவிட்டதாக தெரிகிறது. அதை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தீபிகா திருமணம் ஆகாதவர். பெற்றோரை பிரிந்து தீபிகா தனியாக குன்றத்தூரில் வாழ்ந்து வந்துள்ளார். தீபிகாவுக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் தொழிலதிபர் மணியும் ஒருவர் என்று தெரிகிறது.
ஆண் நண்பர்களை மயக்கி அவர்களிடம் உல்லாசமாக இருந்துவிட்டு இதுபோல் பணம், நகையை பறிப்பதை தீபிகா வழக்கமாக செய்து வந்ததாகவும்,போலீசார் தெரிவித்தனர். தங்கக்கட்டி மீட்கப்பட்டு விசாரணை முடிந்தவுடன் தீபிகா நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.