6 மாதம், 709 வழக்கு,1,133 பேருக்கு தண்டனை..ஐ.ஜி ரிப்போர்ட்!

Loading

தமிழ்நாட்டில் தென் மண்டலத்தில் 89 கொலை வழக்குகளில் நெல்லையில் அதிகபடியாக 15 வழக்குகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது என்று ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தெரிவித்துள்ளார்..

இதுகுறித்து ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-“தென் மண்டல காவல்துறை 2025-ம் ஆண்டின் முதல் அரையாண்டில், தண்டனை பெற்று தருவதில் கணிசமான சாதனைகளை பதிவு செய்துள்ளது. 709 வழக்குகளில் 1,133 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

தென் மண்டலத்தில் 89 கொலை வழக்குகளில் நெல்லையில் அதிகபடியாக 15 வழக்குகளில் தண்டனை பெறப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

தேனியில் 15 வழக்கு, தூத்துக்குடியில் 13 வழக்கு, விருதுநகரில் 12 வழக்கு, சிவகங்கையில் 9 வழக்கு என மொத்தமாக 196 குற்றவாளிகள் கொலை வழக்குகளில் தண்டிக்கப்பட்டனர். மதுரை மற்றும் நெல்லை மாவட்டங்களில் 14 சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

கொலை முயற்சி வழக்குகளை பொறுத்தமட்டில் மொத்தம் 52 கொலை முயற்சி வழக்குகளில், 80 குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில், நெல்லையில் 17 பேரும், தேனியில் 15 பேரும், ராமநாதபுரத்தில் 12 பேரும் என அடங்குவர்.போதை பொருள் தொடர்பான வழக்குகளை பொறுத்தமட்டில் தென் மண்டலத்தில் 582 என்.டி.பி.எஸ். வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 857 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 244 குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அல்லது முன் குற்ற வழக்குகள் உள்ளவர்கள் ஆவர். இவற்றில் பெரும்பான்மையான தண்டனைகள் மதுரையில் 7, திண்டுக்கல்லில் 4, தேனியில் 2 வழக்குகளில் பெறப்பட்டுள்ளன. இதுபோதைப்பொருள் கடத்தலை தடுக்கும் காவல்துறையின் தீவிர மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையை வெளிப்படுத்துகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0Shares