பெற்றோர்களின் எதிர்பார்ப்பை மாணவிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.. அமைச்சர் செழியன் பேச்சு!
வாலாஜா அறிஞர் அண்ணா மகளிர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 46 மற்றும் 47 -வது கல்லூரி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாவில் பட்டங்களை வழங்கி பேசும்போது அமைச்சர் செழியன் கூறினார்.
ராணிப்பேட்டைமாவட்டம்,வாலாஜாபேட்டை பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா மகளிர் கலைக்கல்லூரியில் 46 மற்றும் 47-வது கல்லுரி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் தலைமையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர். கோவி.செழியன் மற்றும் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர்.காந்தி ஆகிய இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
அப்போது கூட்டத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர். கோவி.செழியன் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்ற மாணவிகள் அனைவரும் தங்களது பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார் மேலும் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்கள் பெரும்பாலும் கலைஞர் அரங்கம், தமிழ் வளர்ச்சி அரங்கம், பயிலரங்கம் போன்ற அரங்குகளில் நடைபெற்ற விழாக்களுக்கு தான் சென்றுள்ளதாகவும், ஆனால் முதன்முறையாக அறிஞர் அண்ணா என்ற பெயரை கொண்ட இந்த மிகப்பெரிய கல்லூரிக்கு வருகை தருவது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து 2450 மாணவிகளுக்கு பட்டங்களை அமைச்சர்கள். கோவி.செழியன் மற்றும் ஆர்.காந்தி வழங்கி கௌரவித்து அனைத்து மாணவிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வில் வேலூர் மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநர். மலர், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர். ஈஸ்வரப்பன், கல்லூரி முதல்வர் நசீம்ஜான், மு.முதவர். பூங்குழலி மற்றும் அரசு அதிகாரிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்