புதுச்சேரி முதல்வர் திரு. ரங்கசாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து!

Loading

அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர்டாக்டர் எஸ்.ராஜேந்திரன் அவர்கள் புதுவை முதல்வர் திரு. ரங்கசாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் பாஜக என் ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது .இந்தக் கூட்டணி ஆட்சி ஆட்சியில் ரங்கசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார், அவருக்கு இன்று பிறந்தநாள் .இதை முன்னிட்டு NR காங்கிரஸ் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர், அது மட்டும் இல்லாமல் தொகுதி வாரியாக நிர்வாகிகள் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்கள்.

இதே போல் பல்வேறு கோவில்களிலும் தேர் வழிபாடு நிகழ்ச்சியும் செய்தனர்.இந்தநிலையில் முதல்வர் திரு. ரங்கசாமி அவர்களுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.இதேபோல புதுவை துணைநிலை ஆளுநர் கைலாசநாதர் அவர்களும் முதலமைச்சரங்கசாமி நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.இதையடுத்து அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர்டாக்டர் எஸ்.ராஜேந்திரன் புதுவை முதல்வர் திரு. ரங்கசாமி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.அவர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

மக்களின் பேராதரவு பெற்ற புதுவை முதல்வர் திரு. ரங்கசாமி அவர்கள் நீண்ட ஆயுளுடனும்உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டும் என்று என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் தேசியத் தலைவர்
டாக்டர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

0Shares