கடந்த ஆட்சியில் பணியிடங்கள் நிரப்ப முடியவில்லை…முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு!
கடந்த ஆட்சியில் பணியிடங்கள் நிரப்ப முடியவில்லை, எதுவுமே செய்யாததால் காலிப்பணியிடங்கள் உள்ளது என்று முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
புதுச்சேரியில் புதியாதக தேர்வு செய்யப்பட்ட இளநிலை பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறைஅமைச்சர் நமசிவாயம் ஆகியோர் வழங்கினர்..அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:வயது வரம்பில் சில தளர்வுகளை கொடுக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம் என முதல்வர் ரங்கசாமி கூறினார் .
மேலும் குஜராத்துக்கு இணையாக மின் சாரம் புதுச்சேரியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.புதுச்சேரியில் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.பெரிய அளவில் வளர்ச்சியை கொண்டுவந்துள்ளோம்.
காலத்தோடு பணியை நிரப்படாததால் நிர்வாகத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.தவளகுப்பம், லாஸ்பேட்டை, மரப்பாலம் ஆகிய பகுதிகளில் துணை மின் நிலையம் அமைத்தால் மின் தடை ஏற்படாது.வயது தளர்வு கொடுக்க முடியாததால் மிகவும் கஷ்டமாக உள்ளது.
கடந்த ஆட்சியில் பணியிடங்கள் நிரப்ப முடியவில்லை, எதுவுமே செய்யாததால் காலிப்பணியிடங்கள் உள்ளது- என முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து விழாவில் பேசிய உள்துறைஅமைச்சர் நமசிவாயம் கூறியதாவது:புதியாதக தேர்வு செய்யப்பட்ட இளநிலை பொறியாளர் நள்ளிரவு 12மணிக்கு மின்தடை என பொதுமக்கள் புகார் தெரிவித்தாலும் அதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்துறை ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்.
அரசு நினைத்து இருந்தால் வேண்டியர்கள் அல்லது கட்சிக்காரர்களை கொண்டு அரசு பணியிடங்களை நிரப்பி இருக்க முடியும், ஆனால் தகுதியானவர்களுக்கு பணி அளிக்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கொள்கை முடிவு எடுத்து கடந்த 4-ஆண்டுகளாக அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
கட்சிக்கு வேலை செய்தவர்கள் நேரடியாக முதல்வர் மற்றும் அமைச்சரிடம் வந்து அரசு பணி வழங்கக்கோரி சண்டை போடுகின்றனர் என அமைச்சர் நமச்சிவாயம் கூறினார் .