தேர்தலில் பாஜக அரசு செய்த மோசடியை விரைவில் ஆதாரத்துடன் நிரூபிப்போம்.. ராகுல்காந்தி சொல்கிறார்!

Loading

மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு எவ்வாறு மோசடி செய்தது என்பதை இன்னும் சில நாட்களில் ஆதாரத்துடன் நிரூபிக்கப் போகிறோம்என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.

சமீப காலமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார், ஆளும் கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார், இதற்காக தேர்தல் ஆணையமும் ராகுல் காந்திக்கு தக்க பதிலடி கொடுத்தது ,ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கண்டனத்தை தெரிவித்தது, இந்த நிலையில் மீண்டும் தேர்தல் ஆணையம் மீது தனது அதிருப்தியை ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார்

காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி, “இந்தியாவில் தேர்தல் முறை இறந்துவிட்டது. மக்களவைத் தேர்தலில் பாஜக அரசு எவ்வாறு மோசடி செய்தது என்பதை இன்னும் சில நாட்களில் ஆதாரத்துடன் நிரூபிக்கப் போகிறோம்.இந்த ஆதாரத்தைக் கண்டுபிடிக்க 6 மாதங்கள் இடைவிடாமல் உழைத்தோம்.

மக்களவைத் தேர்தலில் 15 இடங்கள் மோசடி செய்யாமல் இருந்திருந்தால் அவர் மீண்டும் பிரதமராகியிருக்க முடியாது. வாக்களித்த 6.5 லட்சம் வாக்காளர்களில் 1.5 லட்சம் பேர் போலியானவர்கள்” என்று அவர் தெரிவித்தார்.

0Shares