மருத்துவ முகாமில் எம்.பி. Vs எம்.எல்.ஏ மோதல்..பொதுமக்கள் அதிர்ச்சி!
தேனி மாவட்டத்தில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. மற்றும் மகாராஜன் எம்.எல்.ஏ. இடையே மேடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்லாகி வருகிறது.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட “நலம் காக்கும் ஸ்டாலின்” பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாம், நேற்று தேனி மாவட்டத்தில் நடத்தப்பட்டது. இந்த முகாமில் தங்கத்தமிழ்ச்செல்வன் எம்.பி. மற்றும் மகாராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்ட நிலையில், மேடையில் கடுமையான மோதல் ஏற்பட்டு பரபரப்பான சூழ்நிலை உருவானது.
தங்கத்தமிழ்ச்செல்வனின் புகைப்படம் வரவேற்பு பேனரில் இல்லாததைக் கண்டித்து அவர் மேடையில் கோபத்துடன் வந்ததுடன், மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வின் போதும் மகாராஜன் வழங்கிய அட்டையை பறித்து, தானே வழங்க முயற்சி செய்தார். இதனால் கண்கூடாக வாக்குவாதம் வெடித்தது. பலர் பங்கேற்ற மேடையில் மரியாதையற்ற வார்த்தைகள் பரிமாறப்பட்டதை காண்ந்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் சமாதானம் செய்தும் பயனில்லை. பின்னர் தங்கத்தமிழ்ச்செல்வன், விழாவை புறக்கணித்து வெளியேறினார்.
இதுகுறித்து தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியது:“முக்கியத்துவம் வழங்கப்படவில்லை; எனவே விழாவிலிருந்து வெளியேறினேன் என ஆவேசமாக கூறியுள்ளார்.