வெளிநாட்டு வேலைக்கு செல்லும் முன் தெரிந்திருக்கவேண்டியவை.. வழிமுறைகளை வெளியிட்ட சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்!
![]()
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு தேடி செல்லும் நபர்கள், பாதுகாப்பாக பயணம் செய்து, சட்டபூர்வமான வாழ்க்கையை மேற்கொள்ள, அவசியமான வழிகாட்டுதல்களை சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப., வெளியிட்டுள்ளார்.
செல்லும் முன் அவசியம் செய்ய வேண்டியவை: eMigrate இணையதளத்தில் பதிவு: https://emigrate.gov.in இணையதளத்தில் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சி தீர்ப்பு முகவர்கள் மூலமாகவே வேலைக்கு செல்ல வேண்டும்.
விசா, வேலை ஒப்பந்தம், ஆவணங்கள்:பணிக்கு செல்லும் முன் ஊதியம், வேலை விதிகள், உரிமைகள், பொறுப்புகள் ஆகியவை இடம்பெறும் வேலை ஒப்பந்தம், விசா மற்றும் தேவையான ஆவணங்களை பெற்றிருக்க வேண்டும்.
வேலைக்கான ஒப்பந்தம் கையில் வைத்திருங்கள்: இது உங்களின் சட்ட உரிமையை உறுதி செய்யும் முக்கிய ஆவணம்.
நாட்டின் சட்ட, கலாச்சாரத்தை மதிக்கவும்: பல நாடுகளில் “Exit Permit” அவசியம்.
ஒரே நிறுவனத்திலேயே வேலை செய்வது கட்டாயமாக இருக்கலாம் – மாற்றம் அனுமதிக்கப்படாது.
தவிர்க்க வேண்டிய அபாயங்கள்: பதிவு பெறாத போலி முகவர்கள் மூலம் செல்லவேண்டாம்
சுற்றுலா விசாவில் வேலை செய்யக்கூடாது – இது சட்டவிரோதம், கைது, அபராதம், சிறை தண்டனைக்கு காரணமாகலாம்.
உதவி தேவைப்பட்டால்:இந்தியாவில் இருந்து: 1800 309 3793,வெளிநாடுகளில் இருந்து: 080 6900 9900 (Missed call: 080 6900 9901) மின்னஞ்சல்:nrtchennai@gmail.com,nrtchennai@tn.gov.in
வலைதளம்: https://nrtamils.tn.gov.in
நினைவில் வைத்திருக்க வேண்டும்:சட்டபூர்வமான வழியில் சென்றால்தான் பாதுகாப்பான வேலை, நிம்மதியான வாழ்கை!அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள் – மோசடிகளிலிருந்து உங்களை காக்குங்கள்.

