தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி..12 மணி நேர வேலை திட்டம் வாபஸ்!

Loading

கர்நாடக அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை திட்டம் எதிரொலியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த திட்டத்தை வாபஸ் பெறுவதற்கான முடிவை தற்போது அரசு அறிவித்துள்ளது. இது தொழிலாளர் சங்கங்களின் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

கர்நாடக அரசு தற்போதைய சட்டம் தினமும் 10 மணி நேரம் (ஓவர் டைம் உட்பட) வேலை செய்ய முடியும்.இதையடுத்து இந்த சட்ட திருத்த மசோதா 2025: வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த அரசு திட்டமிட்டது.

இது IT மற்றும் ITES நிறுவனங்களுக்கு அமல்படுத்தப்பட வேண்டியதாக இருந்தது.இதனால் 2 ஷிப்டுகளில் பணியாற்றும் நடைமுறை ஏற்பட வாய்ப்பு.ஊழியர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு வரை குறைப்பு ஏற்படும் அபாயம் ஏற்படும் .மேலும் ஊழியர்களின் உடல், மன நலத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

இதனால் KITU (கன்னட தொழிலாளர் சங்கம்) உட்பட பல தொழிற்சங்கங்கள் 6 வாரங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டன.தொழிலாளர் நலத்துறை கூடுதல் ஆணையர் ஜி.மஞ்சுநாத், தொழிற்சங்கங்களை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.தொழிற்சங்கங்கள் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதிகாரிகள் வலியுறுத்தலுக்கு இணங்க, திட்டத்தை விலக்குவதாக அரசு அறிவிப்பு.தொழிலாளர் நலத்துறை மந்திரியின் உறுதிமந்திரி சந்தோஷ் லாட் தெரிவித்தது:12 மணி நேர வேலை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் நலனே முக்கியம் என தெரிவித்தார்.”

“இது தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் வெற்றி.”
“அரசின் முடிவுக்கு நன்றி KITU தெரிவித்துள்ளது:.”

தொழிலாளர் நலத்தை புறக்கணிக்கும் முயற்சியாக கருதப்பட்ட 12 மணி நேர வேலை திட்டம், போராட்டங்களுக்குப் பிறகு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது நியாயமான வேலை நேரத்துக்கான தொழிலாளர் போராட்டத்தின் முக்கிய வெற்றி ஆகும்.

0Shares