மகன் உயிரிழப்பால் மனவேதனையில் பெற்றோர் தற்கொலை: உறவினர்கள் அதிர்ச்சி!

Loading

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே கந்தசாமியூர் வடக்கு தயிர்பாளையத்தைச் சேர்ந்த வேலுச்சாமி (53), அவரது மனைவி தீபா (40) ஆகியோர் மகன் உயிரிழந்த துயரத்தில் தற்கொலை செய்து கொண்டனர்.

தம்பதியினரின் மகன் பிரதீப் (22) கோவை கல்லூரியில் பி.இ. படித்து வந்தார்.ஏப்ரல் 16ம் தேதி ஊருக்கு வந்த அவர் தந்தையின் விசைத்தறி பட்டறையில் கூரை சரிசெய்யும் போது சிமெண்டு ஓடு உடைந்து விழுந்து கடும் காயமடைந்தார்.இதையடுத்து சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 18ம் தேதி உயிரிழந்தார்.

மகன் இறந்த பின்பு, வேலுச்சாமி-தீபா தம்பதியினர் ஆழ்ந்த மனவேதனையில் இருந்தனர்.“இனி வாழ்வதற்கு அர்த்தமில்லை, நாமும் செத்து விடலாம்” என்று உறவினர்களிடம் கூறி வந்ததாகத் தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் தீபா தனது உறவினர்களுக்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பினார்.அதில்,“பிரதீப் குட்டியின் பிரிவை மறக்க முடியவில்லை. நாங்களும் எங்கள் தங்கத்தை தேடி போகிறோம். எங்களின் முடிவுக்கு நாங்கள் மட்டுமே காரணம் என கூறினர் .”

மெசேஜ் கேட்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து உடனே வீடு சென்றனர்.இருவரும் உயிரிழந்தனர்
வீட்டில் சென்றபோது வேலுச்சாமி மற்றும் தீபா விஷம் குடித்து இறந்த நிலையில் இருந்தனர்.

கவுந்தப்பாடி போலீசார் உடல்களை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற துயரத்தை சந்திக்கும் குடும்பங்களுக்கு மனநல ஆலோசனை மற்றும் உதவி மையங்கள் தேவையானவை என்பதை வலியுறுத்தும் சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

0Shares