புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என சொன்னது குற்றமா?மாணவி எடுத்த விபரீத முடிவு!
![]()
சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிடுவதை காதலன் கண்டித்ததால் மாணவி எடுத்த விபரீத முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் மாணவியின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி தெர்மல்நகர் லேபர் காலனியை சேர்ந்தஅரிச்சந்திரன் என்பவருடைய மகள் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்தநிலையில்
அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவி சமூகவலைதளத்தில், தனது புகைப்படத்தை பதிவேற்றம் செய்வதனை அறிந்த காதலன் மாரிச்செல்வம் கடுமையான வார்த்தைகளால் மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது, இதன் காரணமாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மாணவியின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மாரிச்செல்வம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை மாணவியின் உடலை வாங்கமாட்டோம் என்று உறவினர்கள் தெர்மல்நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக மாரிச்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

