மனைவியையும், மாமியாரையும் கொன்று புதைத்த இடத்தில் வாழைக்கன்று நட்ட கொடூரம் – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்!
ஒடிசா மாநிலத்தில், நபர் ஒருவர் தனது மனைவியையும், மாமியாரையும் கொலை செய்து, வீட்டின் பின்புறம் தோட்டத்தில் புதைத்து, அதன் மேல் வாழைக்கன்றுகளை நட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த தேபாஷிஷ் பத்ரா, மனைவி சோனாலி தலால் (23) மற்றும் ஒரு மகனுடன் வாழ்ந்து வந்தார்.தம்பதியருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கடந்த 12ஆம் தேதி சோனாலியின் தாய் சுமதி தலால் மகளையும் பேரனையும் அழைத்துக் கொண்டு சமரசம் செய்ய வந்தார்.
சுமதி ஒரு வாரம் அங்கு தங்கியிருந்தார்.கொடூர கொலை மற்றும் புதைத்த சம்பவம்கடந்த 19ஆம் தேதி இரவு, அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது தேபாஷிஷ், மனைவி சோனாலி மற்றும் மாமியார் சுமதியை கல்லால் அடித்து கொலை செய்தார்.
பின்னர் உடல்களை வீட்டின் பின்புறம் உள்ள எலுமிச்சைத் தோட்டத்தில் புதைத்து, அதன் மேல் வாழைக்கன்றுகளை நட்டு ஆதாரங்களை மறைக்க முயன்றார்.பின்னர் இருவரும் காணாமல் போனதாக போலியாக போலீசில் புகார் அளித்தார்.
கிராமவாசிகளின் சந்தேகம் மற்றும் போலீஸ் விசாரணையில் பத்ரா மற்றும் அவரது மகன், காணாமல் போன இருவரையும் பற்றிய கவலை காட்டாததால் கிராமவாசிகள் சந்தேகமடைந்தனர்.
அவரது தோட்டத்தில் மண் தளர்வாக இருப்பதும், புதிதாக வாழைக்கன்றுகள் நடப்பட்டிருப்பதும் சந்தேகத்தை அதிகரித்தது.போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், பத்ரா கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அடுத்தடுத்த நடவடிக்கை,பத்ராவை போலீசார் கைது செய்தனர்.தோட்டத்தில் இருந்து அழுகிய நிலையில் இருந்த சோனாலி மற்றும் சுமதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் ஒடிசா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதாரங்களை அழிக்க வாழைக்கன்றுகளை நட்டது என்பது விசாரணையை மேலும் சிக்கலாக்கும் முயற்சியாக போலீசார் கூறியுள்ளனர்.