டாடா பவரின் ’பே ஆடென்ஷன்’ முயற்சி..மாறுபட்ட மூளை செயல்பாடுகளுடையவர்களுக்கு விழிப்புணர்வு!
டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சென்னையில் மாறுபட்ட மூளை செயல்பாடுகளுடைய மாற்றுத்திறனாளிகளுக்காக “தன்வி தி கிரேட்” திரையிடலை நடத்துகிறது.
டாடா பவர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை ,அனுபம் கெர் ஸ்டுடியோஉடன் இணைந்து, சென்னை தி நெக்சஸ் விஜயா மாலில் உள்ள பி.வி.ஆர். பலாஸ்ஸோ திரையரங்கில், “தன்வி தி கிரேட்” திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல்களை நடத்தியது. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு மற்றும் மூளையின் இயல்பான செயல்பாடுகளிலிருந்து வேறுபட்டு இருக்கும் நரம்பியல் ரீதியான குறைபாடான நியூரோடைவர்சிட்டி ஸ்பெக்ட்ரம் பற்றிய ஆழ்ந்த விழிப்புணர்வு, புரிதல் மற்றும் அவர்களை மனதார ஏற்றுக்கொள்ளும் பக்குவம் போன்றவற்றை எல்லோரிடமும் உருவாக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டிருக்கும் டாடா பவரின் ’பே ஆடென்ஷன்’ முயற்சியின் கீழ் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பிரத்தியேக திரையிடலில், டாடா பவர் நிறுவனத்தின் சி.ஹெச்.ஆர்.ஒ. & சீஃப் சஸ்டெயினபிலிட்டி & சி.எஸ்.ஆர். ஹிமால் திவாரிடாடா பவர் நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாறுபட்ட மூளை செயல்பாடுகள் கொண்ட சிறப்பு குழந்தைகள், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள், கல்வியாளர்கள், டாடா குழுமத் தலைவர்கள், தன்னார்வ தொண்டு ஆர்வலர்கள், அரசு பிரதிநிதிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் மற்றும் 470 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மாறுபட்ட மூளை செயல்பாடுகளுடன் இருப்பவர்களை மற்றவர்கள் புரிந்து கொண்டு அவர்களை சக மனிதர்களைப் போலவே மரியாதையுடனும், மதிப்புடனும் பழக வேண்டுமென்பதை வலியுறுத்தும் வகையில் ‘பே ஆடென்ஷன் சென்ஸ்சரி ஸோன்’ ஒன்று ‘சென்சரி ஆல்’ [Sensory All] என்னும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்தது..