பஹல்காம் தாக்குதலில் தொடர்பு : 3 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய இந்திய படை!

Loading

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடய பாகிஸ்தானை சேர்ந்த 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை சுற்றிவளைத்து என்கவுண்டர் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் மீது நடத்திய தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இது உலக நாடுகளே அதிர்ச்சி செய்தது, உலக நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.அதுமட்டுமல்லாமல் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அளித்தது, இதில் ஒன்பது முகாம்கள் தரைமட்டமானது ,இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவம் மாறி மாறி பதிலடி கொடுத்து வந்தன. இதை எடுத்து சிந்து நதி நீர் நிறுத்தி வைக்கப்பட்டது.
பாகிஸ்தானுக்கு செல்லாமல் அதை நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பஹல்காம் தாக்குதலில் தொடர்புடய பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை தேடிவந்தனர்,

இந்தநிலையில் ஜம்மு ஸ்ரீநகர் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட பகுதியில் ட்ரோன்கள் மூலம் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதனையடுத்து, அந்தப் பகுதிக்கு விரைந்த இந்திய ராணுவத்தினரை பார்த்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், இந்திய ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்ததில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கையின் ஒரு பகுதியாக என் கவுண்டர் என பாதுகாப்பு படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் என்பது தெரியவந்தது. இவர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்தது.

0Shares