பெண்களின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடி.. ஆபரேசன் சிந்தூர் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

Loading

பயங்கரவாத செயல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது என ஆபரேசன் சிந்தூர் வாயிலாக தெளிவுப்படுத்தப்பட்டது என்று மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசினார்.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு செயல்படும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள்.

இது உலக நாடுகளே அதிர்ச்சி அடை செய்தது .உலக நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்,இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா ஆபரேஷன் சிந்து என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அளித்தது. இதில் ஒன்பது முகாம்கள் முற்றிலும் தரைமட்டமானது,

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன.

ஆனால், அமெரிக்காவின் தலையீட்டாலேயே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் நடைபெறாமல் முடிவுக்கு வந்தது என அந்நாட்டு ஜனாதிபதி டிரம்ப் கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இநநிலையில், டிரம்ப் கடந்த 22-ந்தேதி கூறும்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரானது அணு ஆயுத போரில் சென்று முடிய இருந்தது. அதனை நான் தடுத்து நிறுத்தினேன் என மீண்டும் நேற்று கூறினார்.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேசன் சிந்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்போது, விவாதத்திற்கு முழு ஒத்துழைப்பு தர மத்திய அரசு தயாராக உள்ளது என கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான உறுதியான நடவடிக்கையாக ஆபரேசன் சிந்தூர் அமைந்தது. இந்தியாவின் நவீன ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினோம்.

இந்திய மகளிரின் சிந்தூர் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் தீவிரவாத இடங்களை மட்டுமே நாங்கள் இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தினோம்.

இந்திய வீரர்களின் வீரத்திற்குகும், திறமைக்கும் நான் தலைவணங்குகிறேன். அப்போது, பயங்கரவாத செயல்களை இந்தியா பொறுத்து கொள்ளாது என ஆபரேசன் சிந்தூர் வாயிலாக தெளிவுப்படுத்தப்பட்டது.

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, எந்த அழுத்தத்திற்கும் அடிபணியவில்லை. அது ஒரு தற்காப்பு நடவடிக்கை. முப்படைகளின் அசாத்திய ஒருங்கிணைப்புக்கு இது ஒரு சிறந்த உதாரணம் என அவர் பேசியுள்ளார்.

போரை நிறுத்த முதலில் பாகிஸ்தான் நாடே கோரிக்கை விடுத்தது. பாகிஸ்தான் விமான தளங்கள் தாக்கப்பட்டதும், தாக்குதலை நிறுத்த அந்நாட்டு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். நம்முடைய நோக்கங்கள் நிறைவேறின என்று பேசியுள்ளார்.

0Shares