அடுத்து அடுத்து மழை அதிகம் இருக்கும் – வானிலை ஆய்வாளர்கள் கணிப்பு!
அடுத்த மாதம் முதல் 2 வாரங்கள் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும் என்றும், 3-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பதிவாகக் கூடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர் ஒருவர் கணித்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் கடந்த ஜூன் மாதம் தொடக்கத்திலேயே பெய்ய தொடங்கியது, இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் ,திண்டுக்கல் ,கன்னியாகுமரி ,நெல்லை ,பாபநாசம், தென்காசி போன்ற மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்தது, இந்த மழை தொடர்ந்து கேரளாவில் பெய்து வந்ததால் அதன் தாக்கம் தமிழகத்திலும் காணப்பட்டது,
மேல் அடுக்கு சுழற்சி போன்ற வானிலை நிகழ்வுகளால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது, சென்னையில் அவ்வப்போது மழை பெய்து மக்களை குளிர்வித்தது, குறிப்பாக சில வாரங்களில் அதிகமான வெப்பநிலையும் காணப்பட்டது, இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் 2 வாரங்கள் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தென் மேற்கு பருவமழை, வெப்பசலன மழையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 6 சதவீதம் குறைவு ஆகும்.
மேலும் பெரும்பாலான நாட்களின் வெப்பமான சூழ்நிலையே அதிகம் நிலவியதால், மழைப் பதிவு குறைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் கணித்து இருக்கின்றனர்.
அந்த வகையில் அடுத்த மாதம் முதல் 2 வாரங்கள் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும் என்றும், 3-ந்தேதி முதல் 15-ந்தேதி வரையிலான இடைபட்ட காலத்தில் வடகடலோரம், வடக்கு உள் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் என பரவலாக இடியுடன் கூடிய கனமழை இருக்கும் என கணித்துள்ளனர்.
இதேபோல், 18-ந்தேதி முதல் 31-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் கேரளா, கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து காணப்படும் எனவும், தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட பகுதிகள், ஒட்டுமொத்தத்தில் அடுத்த மாதம் இயல்பைவிட அதிக மழையும், இயல்பான வெப்பமும் தமிழ்நாட்டில் பதிவாகும் என கணிக்கப்பட்டிருக்கிறது.