பள்ளிகளுக்கு இடையே நடந்த தமிழாக்கம் செய்தல் போட்டி..சாந்திராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி முதலிடம்!
![]()
பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தமிழாக்கம் செய்தல் போட்டியில் சாந்திராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்னிகா முதலிடத்தை பிடித்தார்.மாணவி கோகுல வித்யா இரண்டாமிடத்தை பெற்றார்.
சிவகங்கை மாவட்டம் கல்லலில் தமிழாக்கம் செய்தல் போட்டி சாந்திராணி பதின்ம மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. ராம்ராக் நினைவு பாசறை நிறுவனர் சந்திரமோகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி பள்ளியின் துணை முதல்வர் ஹம்சத்வணி முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டப் பொருளாளர் பிரபு வரவேற்புரையாற்றினார். தமிழாக்கம் செய்தல் போட்டியில் நடுவர்களாக சத்தியமூர்த்தி மாரிமணிகண்டன் மகாலெட்சுமி சிறப்பாக பணியாற்றினார்கள்.
அரசு உயர்நிலைப்பள்ளி கல்லல் அரசு மேல்நிலைப்பள்ளி செம்பனூர் மறவமங்கலம் வெற்றியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறூர் குருந்தம்பட்டு முருகப்பா மேல்நிலைப்பள்ளி சாந்திராணி பதின்ம மேல்நிலைப்பள்ளி பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி கல்லல் சேது ஐராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கண்டரமாணிக்கம் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒக்கூர் ஆகிய பள்ளிகளின் 249 மாணவ மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனர்.
கல்லல் சாந்திராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி வர்னிகா முதலிடத்தையும் கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளி மாணவி கோகுல வித்யா இரண்டாமிடத்தையும் சாந்திராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் யஷ்வந்த் மூன்றாமிடத்தையும் பெற்றனர்.
ஆசிரியர்கள் நாகரத்தினம் தேன்மொழி மற்றும் ஆசிரியைகள் ஆகியோர் அறைக் கண்காணிப்பாளர்களாக சிறப்பாக பணியாற்றினர். தமிழ்நாடு அறிவியல் இயக்க கல்லல் கிளைத்தலைவர் தனுஷ் ஸ்டாலின் நன்றி கூறினார்.

