ஏமாற்றிய காதலன்.. பெண் போலீஸ் எடுத்த விபரீத முடிவு!

Loading

கல்யாணம் ஆனதை மறைத்து இளம் பெண்ணை காதலித்து ஏமாற்றியதால் பெண் போலீஸ் தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஓடுகுண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரசாந்தி.24 வயதான இவர், புரோட்டூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் பெண் போலீசாக வேலைப் பார்த்து வந்தார். இவரும், சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த வாசு என்பவரும் ஒன்றாக வேலைப் பார்த்தபோது பழகி கள்ள காதலர்களாக மாறியுள்ளனர்.

இருவரும் தொடர்ந்து காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக தொடர்பில் இல்லாமல் இருந்த தன்னுடைய காதலன் வாசுவை பார்க்க பெண் போலீஸ் பிரசாந்தி ஓரிரு நாட்களுக்கு முன்பு குப்பத்தை மார்வாடா கிராமத்துக்கு வந்து வாசுவை பற்றி விசாரித்தார்.

அப்போது வாசு திருமணம் ஆனவர் எனத் தெரிய வந்ததையடுத்து பிரசாந்தி, வாசுவிடம் என்னை காதலித்து ஏமாற்றி விட்டாயே எனக்கூறி வாக்குவாதம் செய்தார். இதையடுத்து பிரசாந்தியின் பெற்றோர் குப்பத்துக்கு வந்து மகளை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

இந்தநிலையில் எதிர்பாராத விதமாக சம்பவத்தன்று இரவு மீண்டும் பெண் போலீஸ் பிரசாந்தி தனது காதலன் வீட்டுக்கு வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அவரை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பதி அரசு ருயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி பெண் போலீஸ் பிரசாந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காதலன் வாசு கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

0Shares