ஓடும் ரெயிலில் மாணவியிடம் சில்மிஷம்: ஐகோர்ட்டு ஊழியர் கைது!
ஓடும் ரயிலில் பாலியல் மாணவிக்கு தொல்லை அளித்த ஐகோர்ட்டு ஊழியர் கைது செய்யப்பட்டார்.
ஓடும் பேருந்தில் பாலில் தொல்லை ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை விமானத்தில் பாலிய தொல்லை என பெண்களுக்கான எதிரானபாலியல் சில்மிஷங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓடும் இரவில் வேலூரில் இளம்பண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது இல்லாமல் ஓடும் ரயில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதேபோல கேரளாவில் சமீபத்தில் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர், நேற்று முன்தினம் திருவள்ளுவர் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பாரில் ஈடுபட்ட டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார் .இந்த நிலையில் ஓடும் ரெயிலில் மாணவியிடம் சில்மிஷம் செய்த ஐகோர்ட்டு ஊழியரை கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் திருச்சூர் சட்டக்கல்லூரியில் படித்து வருவதால் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் ஊருக்கு வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் வழக்கம்போல சொர்ணூர்- திருவனந்தபுரம் வேநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஊருக்கு புறப்பட்டார்.
அப்போது அந்த ரெயில் இரவு 9 மணியளவில் வர்க்கலாவை கடந்து திருவனந்தபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது மாணவியின் அருகில் இருந்த ஒருவர் அவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி உடனே ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் திருவனந்தபுரம் வட்டியூர்க்காவு பகுதியை சேர்ந்த சதீஷ் என்பதும், கேரள ஐகோர்ட்டில் ஊழியராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.