வருகின்ற 2 -ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்.. நீலகிரி மாவட்ட ஆட்சியர் தகவல்!
உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் 02-08-2025 அன்று மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்நடைபெறவுள்ளதாக என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 02.08.2025 அன்று பழங்குடியினர் பண்பாட்டு மையம், கார்டன் ரோடு உதகையில் நடைபெறவுள்ளது. இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் சென்னை, கோவை,ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களிலிருந்து 100க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 10000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தங்கள் நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் 02.08.2025 அன்று காலை 08.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.
இம்முகாமில், 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி, பட்டதாரிகள்,பட்டயப்படிப்பு படித்தவர்கள், ஐடிஐ, கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்கள் என அனைத்து விதமான தகுதியாளர்களும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசமானதாகும். எனவே நீலகிரி மாவட்டத்தில் ஆர்வமாக உள்ள வேலைநாடுநர்கள் அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு இரத்து செய்யப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.இம்முகாமில் கலந்துக்கொள்ளும் வேலைநாடுநர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தத்தேவையில்லை. இம்முகாமில் கலந்துக்கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய கொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனியார்துறை நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமில் பல்வேறு அரசுத்துறைகள் சார்பாக அரங்கங்கள் வேலைநாடுநர்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்படவுள்ளது.மேலும் விவரங்களுக்கு உதகமண்டல மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் அல்லது தொலைபேசி 0423-2444004/ 7200019666 வாயிலாக தொடர்பு கொள்ளலாம் என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, அவர்கள் தெரிவித்துள்ளார்.