பிரபல ஓட்டலில் வாங்கிய பொங்கலில் புழு.. விமான நிலையத்தில் பரபரப்பு!
![]()
பெங்களூரு புறநகர் விமான நிலையத்தில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் பொங்கலில் புழு கிடந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
.
கடந்த ஆண்டு 2024 மார்ச் மாதம் பெங்களூரு ராமேஸ்வரம் கபே ஓட்டலின் ஒயிட்பீல்டில் உள்ள கிளையில் வெடிகுண்டு வெடித்து, இந்த குண்டு வெடிப்புக்கு பிறகு அந்த ஓட்டல் பிரபலமானது.இந்தநிலையில் ராமேஸ்வரம் கபே ஓட்டலுக்கு மீண்டும் ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு புறநகர் விமான நிலையத்தில் இயங்கி வரும் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் ஒரு பெண் விமான பயணி ஒருவர் நேற்று பொங்கல் வாங்கி சாப்பிட்டபோது அந்த பொங்கலில் புழு ஒன்று செத்து கிடந்தது தெரியவந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணி, அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து, பொங்கலில் புழு கிடந்தது பற்றி ஓட்டல் ஊழியர்களிடம் கூறியுள்ளார். அப்போது அந்த ஓட்டல் ஊழியர்கள் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயன்று அந்த பயணியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த பயணி, பொங்கலில் புழு கிடந்ததை செல்போனில் பதிவு செய்து வைத்திருந்த வீடியோ ஆதாரத்தை காட்டிதையடுத்து மன்னிப்பு கேட்ட ஓட்டல் ஊழியர்கள், அந்த உணவுக்கான கட்டணத்தை திரும்ப கொடுத்து அந்த பெண்ணை அனுப்பிவைத்தனர். இதற்கிடையே பொங்கலில் புழு கிடந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து ராமேஸ்வரம் கபே உரிமையாளர் தரப்பில், விமான நிலைய போலீசில் பயணி மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். அதில், எங்கள் ஓட்டலில் வாங்கிய பொங்கலில் புழு கிடப்பதாக கூறி ஒரு செல்போனில் பேசிய நபர் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டினார். எனவே இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார் இந்த விவகாரம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

