கூலிப்படையை ஏவி மனைவியை கொன்ற கணவன் உள்பட 4 பேர் கைது!
வீடு புகுந்து பெண் கொல்லப்பட்ட வழக்கில் ஏற்கனவே கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வெட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய கோபால் என்பவருக்கும்,தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தை சேர்ந்த ஜெர்மின் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 14 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர்.கணவர் விஜய கோபால்உத்தரகாண்ட் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார்.
இந்தநிலையில் கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தநிலையில் மனைவி ஜெர்மின் ஜீவனாம்சம் கேட்டு முதுகுளத்தூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் கடந்த18-ந் தேதி இரவு வீட்டுக்குள் புகுந்த 2 பேர் மனைவி ஜெர்மியை குழந்தைகள் கண் எதிரே ஜெர்மினை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உத்தரகாண்ட மாநிலத்தில் இருந்து விஜயகோபாலை வரவழைத்து விசாரணை நடத்தினர். அதில் விஜயகோபால் கூலிப்படையை ஏவி மனைவியை கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் அளித்ததில் கூறியதாவது :-நான் கட்டிய வீட்டை ஜெர்மின் அபகரிக்க முயன்றதனால் ஆத்திரமடைந்து கூலிப்படைய ஏவி அவரை கொலை செய்யதேன். திட்டமிட்டேன். அதற்காக சங்கர் என்பவரின் ஏற்பாட்டின் 5 பேர் சேர்ந்து வீட்டுக்குள் புகுந்து ஜெர்மினை வெட்டிக்கொலை செய்தனர். இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பெண் கொலை வழக்கில் ஏற்கனவே கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.