பண்ருட்டியில் பார்க்கிங் வசதி இல்லாத கடைகள் மீது நடவடிக்கை தேவை..பொதுநல அமைப்பினர் கோரிக்கை!

Loading

பண்ருட்டி வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பின் சார்பில், பண்ருட்டி நகரப் பகுதியில் பொது மக்களின் அவசிய தேவையான கோரிக்கை வலியுறுத்திமாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் அடிப்படையில், வருவாய் கோட்டாட்சியர் அதிகாரி (RDO) தலைமையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

இக்கூட்டங்களில் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர், பண்ருட்டி நகராட்சி ஆணையர், (பொறுப்பு)போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி மற்றும் பொதுநல அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு, கோரிக்கைகள் மீது விரிவாக விவாதிக்கப்பட்டது.

கோரிக்கைகள் அனைத்தும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.
ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால், 22.07.2025 அன்று பண்ருட்டி நகராட்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுநல அமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, RDO அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரில், பண்ருட்டி வட்டாட்சியர்அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பண்ருட்டி நகராட்சி ஆணையர் திருமதி காஞ்சனா, வருவாய் ஆய்வாளர், காவல்துறை துணை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் பொதுநல அமைப்பின் நிர்வாகிகள் .சிறப்பு ஆலோசகர் சேகர் வேலுமணிஅர்ஜுனன் ஆலோசகர்கள் தலைவர் தெய்வீகதாஸ்செயலாளர்சேக்நூருதீன்நிர்வாகிகள்:தேவநாதன்,ராஜா,முத்து,கவியரசு,பச்சையப்பன்,ராமகிருஷ்ணன், செந்தில் ஆகியவர்கள் கலந்து கொண்டு 12 முக்கிய தீர்மானங்கள்மேற்கொள்ளப்பட்டன1.பண்ருட்டி நகரப் பகுதியில் உள்ள தானாக உருவான (ஆக்கிரமிக்கப்பட்ட) கட்டடங்களை அளவீடு செய்து அகற்றுதல்.

2.சாலையோர கடைகளை ஒழுங்குபடுத்துதல்.3.முகூர்த்த நேரங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, திருமண மண்டபங்களில் கார், இரு சக்கர வாகனங்களுக்கு தனி பார்க்கிங் இடம் இல்லாத மண்டபங்களுக்கு நடவடிக்கைமேற்கொள்வது

4.ஷாப்பிங் மஹால்கள் பெரிய ஜவுளி கடைகள் பார்க்கிங் வசதி இல்லாத கடைகள் மீது நகராட்சி மூலமாகசட்டப்படியான நடவடிக்கை எடுப்பது

5. கனரா வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகளை தவிர்க்க, ஏற்றம்/இறக்கம் செய்யும் நேரங்களை கட்டுப்படுத்தல்.

6 ஒதுக்கப்பட்டுள்ளநேரங்களை மீறி செயல்படும் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தல் .

7.பண்ருட்டி நகர மையப் பகுதியில் உள்ள கடைகள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு 9 மணிக்கு மேல் பயணிகள் பேருந்துக்கு நிலையத்திற்கு செல்லாமல் நான்கு முனை சந்திப்பில் காத்திருந்து சுமார் ஒரு மணி நேரம் அரை மணி நேரம் மேலாக காத்திருந்து பஸ்களில் பயணம் செய்கிறார்கள் அவர்களுடைய அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சுகாதாரக் கழிவறைகள் இல்லாததால், நகராட்சி உடனடியாக கழிவறைகள் அமைக்க இடத்தை தேர்வு செய்து உடனடியாக அமைத்து தர வேண்டும்.
8.நகரத்தில் முக்கிய நான்கு சாலைகளில் போக்குவரத்தை சரிசெய்ய, இருபுற சாலை எல்லைகளை அமைப்பது .9–12. பிற கோரிக்கைகள் மற்றும் நடைமுறை பிரச்சனைகள் குறித்து நகராட்சி நிர்வாகம் பொதுநல அமைப்புடன் சேர்ந்து விரைவில் ஆலோசித்து தீர்வு காண ஒப்புக்கொண்டது.

முடிவில், பண்ருட்டி வட்டாட்சியர் திரு. பிரகாஷ் அவர்களின்தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளும், பொதுநல அமைப்பின் நிர்வாகிகளும் கலந்துகொண்டு தீர்மானங்களில் கையெழுத்திட்டனர். இந்த சந்திப்பு அமைதியாகவும் கட்டுப்பாட்டுடனும் நடைபெற்றது பண்ருட்டியில் வாழ்கின்ற பொதுமக்கள் பொதுநல அமைப்பின் கோரிக்கைகளை நகராட்சி செவி சாய்த்து நிறைவேற்றி கொடுக்குமா என்று இங்கு வாழ்கின்ற மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0Shares