தொழிலாளர் நலத்துறையின் அவல நிலை..போராட்டத்தில் குதித்த தொழிலாளர்கள்!
புதுச்சேரியில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக நுழைவாயிலில் குப்பைகள் கொட்டும் போரட்டத்தினை அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் நடத்தினர்.
புதுச்சேரி காந்தி நகர் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக செக்யூரிட்டி, ஹவுஸ் கீப்பிங் தொழிலாளர்கள் இல்லை அலுவலகம் சுத்தம் செய்யப்படவில்லை குப்பையாக உள்ளது
கழிவறைகள் சுத்தம் செய்யப்படவில்லை. கழிவறையில் தண்ணீர் இல்லைதுர்நாற்றம் வீசுகின்றது. லிப்ட் மூன்று மாதங்களாக பழுதாகியுள்ளது. இரண்டாவது மாடியில் புதிய அறை கட்டப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகியும் பயன்படுத்தப்படாமல் உள்ளது. தொழிலாளர் துறை அலுவலகம் முற்றிலும் செயல்படாமல் சுயநினைவு இழந்து கோமா நிலையில் உள்ளது
இந்தநிலையில் தொழிலாளர் துறை செயலாளர், ஆணையர், துணை ஆணையர் ,அனைவருடைய பொறுப்பற்ற அலட்சியப்போக்கினை கண்டித்தும்புதுச்சேரி அரசு தொழிலாளர் நலத்துறை துறை அலுவலகத்தின் மாண்பினை தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு உணர்த்திடவும்
தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக நுழைவாயிலில் குப்பைகள் கொட்டும் போரட்டத்தினை அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் நடத்தினர்.
தொழிலாளர் துறை ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் துடைப்பம் முறத்துடன் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் . தலைமை ரமேஷ், செயலாளர் சேதராப்பட்டு அனைத்து தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பு, AIUTUC மாநில செயலாளர் சிவக்குமார், முன்னிலை வகித்தார். தமிழ் தேசிய பேரியக்கத்தின் செயலாளர் வேல்சாமி, ஈட்டன் தொழிற்சங்க தலைவர் மோகன்தாஸ், செயலாளர் பாஸ்கர், திருபுவனை ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் முத்துக்குமார், ஜெயக்குமார் சிவப்பிரகாசம் வெங்கடாஜலபதிL&T கிருஷ்ணமூர்த்தி, மாதேஸ்வரன் Jipmer தொழிலாளர் சிவபாலன், காலாப்பட்டு முகேஷ், AIUTUC நிர்வாகிகள் கலைச்செல்வன் , குமரன் , வில்லியனூர் வீராசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர் . போராட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்க நிர்வாகிகளை காவல்துறை அதிகாரிகள் தொழிலாளர் துணை ஆணையர் சந்திரகுமரன் அவர்களிடம் அழைத்துச்சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இப்பேச்சுவார்த்தையில் துணை ஆணையர் சந்திரகுமரன் அவர்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவாக நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.