8 மாத கர்ப்பிணி காதலனுடன் தூக்குப்போட்டு தற்கொலை!
முறைதவறிய காதலால் 8 மாத கர்ப்பிணி காதலனுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூரை அடுத்த தண்டலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் சுரேந்திரனுக்கும் ,உறவினர் மகளான பிரியங்காவுக்கும் இடையே சிறுவயது முதலே பழக்கம் ஏற்பட்டது. என்ஜினீயரான பிரியங்கா போரூரில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
சுரேந்திரனின் தாயும், பிரியங்காவின் தாயும் உடன் பிறந்த சகோதரிகள் ஆவர். சுரேந்திரன்-பிரி யங்கா நட்பாக பழகி வந்த நிலையில் அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இது பற்றி தெரிந்ததும் இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முறை தவறிய காதலை எடுத்து கூறி பின்பும் காதலர்கள் இருவரும் இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தனிமையில் சுற்றி பழகி பிரியங்கா கர்ப்பம் அடைந்தார்.
இது வெளியில் தெரிந்தால் அவமானம் என்று கூறி கர்ப்பத்தை கலைத்து விடலாம் எனவும் சகோதரி உறவு முறையில் வருவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் இரு தரப்பு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் பிரியங்கா கர்ப்பம் அடைந்து 8 மாதங்கள் ஆகி விட்டதால் கர்ப்பத்தை கலைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
திருமணம் செய்து வைக்க பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மனவேதனை அடைந்த காதலர்கள் சுரேந்திரனும், பிரியங்காவும் நேற்று இரவு தண்டலம் பகுதியில் உள்ள பம்புசெட் அறையில் ஒரே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டனர்.
இது குறித்து திருப்போரூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.