சர்க்கரை நோயாளிகளுக்கு ஆறுதல்…அனைத்து உணவுகளும் சாப்பிடலாம்..மருத்துவர் கூறுவது என்ன?

Loading

சர்க்கரை நோய் விழிப்புணர்வு பற்றியும் சர்க்கரை வராமல் தடுக்கும் முறைகள் குறித்த மாநாட்டில் கால உயரியல் நிகழ்வுகளுக்கும் சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து Dr.பிரியதர்ஷினி எடுத்துரைத்தார்.

சேலத்தில் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த சேவை செய்யும் நோக்கில் டயாபடீஸ் அசோசியேசன் ஆப் சேலம் என்ற அமைப்பானது சேலத்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வருகிறது. இதில் புகழ்பெற்ற சர்க்கரை நோயின் நிபுணர்களும், மருத்துவ வல்லுனர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு பற்றியும் சர்க்கரை வராமல் தடுக்கும் முறைகள் குறித்தும் சர்க்கரை நோய் சிகிச்சையில் உலக அளவில் தற்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்தும், கூடி கலந்தாய்வு செய்கின்றனர். அதேபோல் இந்த ஆண்டும் கலந்தாய்வு மாநாடு ஜூலை 20 ஆம் தேதி, சேலம் மாமாங்கத்தில் உள்ள ரேடிஸன் ஹோட்டலில் கலந்தாய்வு மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களில் இருந்து சுமார் 500 மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் கால உயரியல் நிகழ்வுகளுக்கும் சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு குறித்து Dr.பிரியதர்ஷினி எடுத்துரைத்தார். Dr.பாலமுருகன் அவர்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா டயாபடிக் அசோசியேஷன் சார்பாக 2025 ல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் குறித்து உரையாற்றினார். Dr.சத்தியன் ராகவன் அவர்கள் உடலில் ரசாயன மாற்றத்தில் ஏற்படும் கீட்டோன்கள் மற்றும் அதனால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். Dr.ஆனந்தகுமார் அண்ணாமலை என்ற நிபுணர் அலர்ஜி எதிர்ப்பு வாழ்க்கை முறையால் நீரிழிவு நோயாளிகள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பேசினார்.

இந்த ஆண்டு சேலம் Dr.ஜானகிராமன் தங்கப்பதக்கம் விருது புகழ் பெற்ற சேலம் மருத்துவர் Dr.கிருஷ்ணன் செட்டி அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அவர் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தாலும் நீரிழிவு நோயை எட்டாத நிலை (Pre diabetics) குறித்து விவாதம் செய்தார். அதன் பின்பு Dr. அருண்குமார் அவர்கள் சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை உள்ள உணவை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்ற கட்டுக்கதையை உடைத்து அனைத்து உணவுகள் மற்றும் பழங்களை அளவோடு சேர்த்துக் கொள்ளலாம். கார்போஹைட்ரேட் உணவுகளை சிறிது தவிர்த்தால் போதுமானது என்று விரிவுரையாற்றினார்.இறுதியாக, Dr.ஹரி ஜானகிராமன் அவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீர் பாதையில் ஏற்படும் அறிகுறியற்ற பாக்டீரியா தொற்று குறித்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

அதன்பின்பு சர்க்கரை நோயாளிகளுக்கு Intermittent fasting (இடைப்பட்ட விரதம்) அதாவது குறிப்பிட்ட இடைவெளி விட்டு உணவு எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்யலாமா என்பது குறித்து சூடான விவாதத்துடன் மாநாடு இனிதே முடிந்தது.

கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை டயாபட்டிஸ் அசோசியேசன் ஆப் சேலம் (DAS) அமைப்பின் தலைவர் Dr. பிரேம்குமார், துணை தலைவர்கள் Dr. கந்தசாமி, Dr. சதீஷ்குமார், செயலாளர் Dr.கார்த்திகேயன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் Dr. ராஜகணேசன், Dr. பழனிவேல் ராஜன், Dr..ரங்கபாஷ்யம், Dr..சத்தியன் ராகவன், Dr. (மேஜர்) ரவிசங்கர், Dr.முத்துக்குமரன், Dr..நந்தகுமார், Dr.ராம்குமார், Dr.இஸ்ரத், Dr.விஜயபாஸ்கர், Dr.பிரபாகரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

0Shares