எம்ஜிஆர்,ஜெயலலிதா உருவப்படத்தை அகற்ற முயற்சி.. கடும் எதிர்பால் பின்வாங்கிய பேரூராட்சி!

Loading

ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட கலவை பேருந்து நிலைய மேற்கூரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்தை அகற்றவில்லை என்று பேரூராட்சி தலைவர் கலாசதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம்,கலவை பேரூராட்சிக்கு உட்பட்ட கலவை பேருந்து நிலையம் கடந்த 2017-18 ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் அப்போதைய அதிமுக கட்சியை சேர்ந்த அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் கோ. அரி மூலமாக கட்டப்பட்டது.

இந்த பேருந்து நிலையத்தின் மேற்கூரையில் மறைந்த முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படம் வரைய பட்டு உள்ளது.

இந்த நிலையில் தற்போது பேருந்து நிலையம் பழுது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது உள்ள திமுக ஆட்சியாளர்கள் மாவட்ட ஆட்சியரின் மூலமாக அப்பகுதியில் உள்ள அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து பேருந்து நிலையத்தின் மேற்கூறையில் உள்ள அதிமுக கட்சியை சார்ந்த மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களை அழித்துவிட்டு தற்போதுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் ஆகியோரின் உருவ படங்கள் மற்றும் பெயர்களை மாற்றி அமைக்க போவதாக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் கலவை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிமுக தலைவர் துணைத் தலைவர் கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படத்தை அகற்றவில்லை என்று வாக்குறுதி அளித்துள்ளதாக கலவை பேரூராட்சி தலைவர் கலாசதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

0Shares