புது ரூட்டில் எடப்பாடி பழனிசாமி..சீமான், விஜய்க்கு அழைப்பு!
அதிமுக-பாஜக கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி விட்டன .
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 -இல் ‘200 தொகுதிகளில் வெல்வோம்’ என்று சூளுரைத்து, தேர்தல் பணியை துவங்கியது போல, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும்சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சூழலில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது? என்பது குறித்த வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-2 திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும் 026-ல்தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்.என்று கூறினார்,
மேலும் ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும்.
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் மக்கள் “ஒற்றைக் கட்சி ஆட்சியை” மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, இரு கட்சிகளின் கூட்டணியை உடைக்கும் முயற்சிகள் பலனளிக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.