மின்சார பிரச்சனை குறித்து மின் துறை அதிகாரிகளுடன் அனிபால் கென்னடி ஆலோசனை!

Loading

புதுச்சேரி உப்பளம் தொகுதி மின்சார பிரச்சனை குறித்து மின் துறை அதிகாரிகளுடன் அனிபால் கென்னடி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி – உப்பளம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட வாணரப்பேட்டை, நேதாஜி நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக மின்சார பிரச்சனை நிலவி வருகிறது. அடிக்கடி மின் நிறைவு குறைவு, மின் அழுத்தம் பாதிப்பு போன்றவை பொதுமக்களை பெரிதும் அவதிப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி தொடர்ந்து மின்துறை மற்றும் ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கேட்டுவருகிறார்.

அதற்கிணங்க அவர், ஸ்மார்ட் சிட்டியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (டெவலப்மெண்ட்) திரு. ரவிச்சந்திரன் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். தலைமை மின் அதிகாரி முரளி டெல்லி பயணத்தில் உள்ள காரணத்தால் இந்த சந்திப்பு ரவிச்சந்திரனுடன் நடைபெற்றது. ஆலோசனையின் போது, ஸ்மார்ட் சிட்டி மின் அதிகாரி சுப்ராயனும் கலந்து கொண்டார்.

சந்திப்பின் போது, நேதாஜி நகர் , வாணரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சில இடங்களில் டிரான்ஸ்பார்மர் வைக்க தேவையான கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பதையும், ஆனால் டிரான்ஸ்பார்மர் இன்னும் பொருத்தப்படாததை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு வந்தார். வைப்பிடங்களில் டிரான்ஸ்பார்மர் பொருத்தப்பட்டால் மின் அழுத்த குறைபாடுகள் மற்றும் மின் தடைகள் குறையும் என அவர் தெரிவித்தார்.

ஆலோசனையின் முடிவில், தலைமை மின் அதிகாரி முரளி அவர்கள் டெல்லி பயணத்திலிருந்து திரும்பியதும், இந்த வாரம் முடிவில் மின் துறை சார்ந்த அனைத்து முக்கிய அதிகாரிகளுடன் ஒரு விரிவான ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

உடன் நகராட்சி செயற் பொறியாளர் சிவபாலன், கழக தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் ராகேஷ், காங்கிரஸ் பொது குழு உறுப்பினர் ராஜ்குமார், தொகுதி திமுக இளைஞர் அணி ஃபிலிப், கழக சகோதரர் தருண் ஆகியோர் உடன் இருந்தனர்.

0Shares