இராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..மாணவர்களுக்கு துணைவேந்தர்பட்டமளித்து சிறப்பித்தார்!
ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் G.ரவி பட்டமளித்து மாணவர்களை கௌரவித்தார்.
காரைக்குடி அமராவதிபுதூரில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 10-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் G.ரவி பங்குபெற்று மாணவர்களுக்கு பட்டமளித்து விழாவை சிறப்பித்தார்.
ஸ்ரீ இராஜ ராஜன் கல்வி குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான முனைவர் S.சுப்பையா தலைமை உரையாற்றி விழாவை துவங்கி வைத்தார் . பெற்றோர்கள் , ஆசிரியர்கள் பெருமைப்படும் வண்ணம் பட்டம் பெற்ற மாணவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்று அறிவுரைகள் கூறினார்.
கல்லூரியின் டீன் முனைவர் சிவகுமார் வரவேற்புரை வழங்கி, ஆண்டறிக்கையை வாசித்தார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் முனைவர் G.ரவி அவர்கள் தனது இளமைக் கால நினைவுகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, கிராமப்புற மாணவர்கள் எதையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்கள் என கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.மாணவர்கள் அனைவரும் திறன்களை மேம்படுத்தி சிறந்த வேலை வாய்ப்பை பெற்று உயர வேண்டும் என வாழ்த்தினார்.
பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான பட்டமளிப்பு நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்ச்சி பெற்ற 150 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் G.ரவி பட்டமளித்து மாணவர்களை கௌரவித்தார். இறுதியாக பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதி மொழி எடுத்தனர். இந்த நிகழ்வில் பேராசிரியர் K.C.பழனிவேல், துணை முதல்வர் V.மகாலிங்க சுரேஷ், பேராசிரியை இராஜேஸ்வரி, பேராசிரியர் அய்யாவு , பேராசிரியர் குணசேகரன், அனைத்துத்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.