அதிகாரம் ஆளுநரிடம்தான் உள்ளது.. முதலமைச்சர் ரங்கசாமி பரபரப்பு பேச்சு!

Loading

எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும், யாருக்கும் பயப்படவில்லை.ஆளுநரிடம் அதிகாரம் உள்ளது என்பது உண்மை என முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

புதுச்சேரி மாநிலத்தில் என் ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது, இந்த கூட்டணி ஆட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் வழிநடத்தி வருகிறார், தற்போது புதுவையில் என் ஆர் காங்கிரஸ் கட்சி தனது உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்தி உள்ளது, அதற்காக மாநில நிர்வாகிகளை நியமனம் செய்து வருகிறது,

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக என் ஆர் காங்கிரஸ் கட்சி தங்கள் பணிகளை துரித படித்துள்ளது ,அது மட்டுமல்லாமல் உறுப்பினர் சேர்க்கையை செயலி மூலம் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு அதற்கான செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.

இந்தநிலையில் புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியின் இணைய வழி உறுப்பினர்கள் சேர்க்கையை இளைஞர் அணி தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

அப்போது விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதால், எதிர்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து சொல்ல வேண்டும்.

மற்றவர்கள் பாராட்டக்கூடிய அளவில் புதுச்சேரி உள்ளது.2026-ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும்.எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும், யாருக்கும் பயப்படவில்லை.ஆளுநரிடம் அதிகாரம் உள்ளது என்பது உண்மை என முதலமைச்சர் ரங்கசாமி பேசினார்.

முன்னதாக விழாவில் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் தலைவர் ரமேஷ் எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசினார்.அதுமட்டுமல்லாமல் எதிர்கட்சிகளுக்கு அவர் சவால் விடுத்தார்.

0Shares