பெண் உதவியாளரை மிரட்டி மசாஜ் ..தலைமை ஆசிரியருக்கு எதிராக களமிறங்கிய பெற்றோர்!

Loading

தலைமை ஆசிரியைக்கு, உதவியாளர் மசாஜ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாக மாறி உள்ளது.தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கர்நாடக மாநிலம் கலபுரகி புறநகர் யாத்ராமி பகுதியில் கஸ்தூரி பாய் காந்தி உண்டு, உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது . இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றிவரும் விஜயாஸ்ரீ பட்டீல் என்பவர் தினமும் பள்ளியில் இருக்கும் ஊழியர்களை மசாஜ் செய்ய சொல்வதும், கால், கைகளை பிடித்துவிடும்படி கூறி வந்ததாக சொல்லப்படுகிறது,இந்தநிலையில் அவர் மீது பகிரங்க குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 18-ந் தேதி பணியில் இருந்த தலைமை ஆசிரியை விஜயாஸ்ரீ, பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வரும் ஒரு பெண் ஊழியரை மிரட்டி மசாஜ் செய்யும்படி கூறியுள்ளார். அந்த பெண் மிரட்டலுக்கு பயந்துபோய் மசாஜ் செய்துள்ளார்.

முடியாது என்றாலும், தொடர்ந்து மிரட்டியதால் வேறு வழியின்றி அந்த பெண்ணும், விஜயாஸ்ரீயின் தோள்பட்டையை இரு கைகளால் மசாஜ் செய்துள்ளார். இந்த அடாவடி தனமான சம்பவத்தை பள்ளியில் இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார் . மேலும் இந்த வீடியோவை பார்த்த பலர் பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் வாட்ஸ்-அப் குழுவிலும் இந்த வீடியோவை பகிர்ந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு இந்த வீடியோவை அனுப்பி வைத்து,அவர்கள் தலைமை ஆசிரியை விஜயாஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்துள்ளனர். மேலும் தலைமை ஆசிரியைக்கு, உதவியாளர் மசாஜ் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாக மாறி உள்ளது.

0Shares