நான்தான் முதல்வர் வேட்பாளர் என எடப்பாடியால் கூறமுடியவில்லை.. திமுகவில் இணைந்த அன்வர் ராஜா காட்டம்!

Loading

“டிரம்ப் ‘நான்தான் போரை நிறுத்தினேன்’ என கூறுவது போல, எடப்பாடி பழனிசாமி ‘நான்தான் முதல்வர் வேட்பாளர்’ என்று 10 நாட்களாக கூறி வருகிறார் திமுகவில் இணைந்த அன்வர் ராஜா கூறினார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜகவின் நோக்கம் அதிமுகவை உடைத்து, திமுகவுடன் நேரடியாக மோதுவதாகும்” என குற்றம் சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமியின் முதல்வர் வேட்பாளர் நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் அமித்ஷாவும் உறுதி செய்யவில்லை எனவும், பாஜக தமிழ்நாட்டில் எதிர்மறை சக்தி எனவும் அவர் கூறினார்.

கருத்தியல் ரீதியாக நாங்கள் வளர்ந்தவர்கள். ஆனால் அதிமுக தற்போது தனது கொள்கைகளை விட்டு விலகி பாஜகவின் கையில் சிக்கியுள்ளது.

தேசிய காங்கிரஸ், சிவசேனை போல அதிமுகவையும் உடைக்கவே பாஜக முயல்கிறது. அதிமுகவை அழித்து, திமுகவுடன் நேரடியாக மோத வேண்டும் என்பதுதான் பாஜகவின் அஜெண்டா.”

“மூன்று முறை பேட்டி அளித்த மத்திய அமைச்சர் அமித்ஷா கூட எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று கூறவில்லை. அதிமுக வென்றால் நான்தான் முதல்வர் வேட்பாளர் என எடப்பாடியாலும் இன்னும் உறுதியாக அறிவிக்க முடியவில்லை.”

“டிரம்ப் ‘நான்தான் போரை நிறுத்தினேன்’ என கூறுவது போல, எடப்பாடி பழனிசாமி ‘நான்தான் முதல்வர் வேட்பாளர்’ என்று 10 நாட்களாக கூறி வருகிறார். அந்த அளவுக்குத்தான் அவரின் நிலைமை சுருங்கியுள்ளது. பாஜக ஒரு எதிர்மறை சக்தி; தமிழ்நாட்டு மக்கள் பாஜகவைக் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.”இவ்வாறு அன்வர் ராஜா தெரிவித்தார்.

0Shares