கள்ளக்குறிச்சியில் அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்க கலந்தாய்வு கூட்டம்!
அனைத்து இந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி .,அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் ஆலோசனை மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் சங்கத்தின் தேசியத் தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் கலந்துகொண்டு மூத்த பத்திரிகையாளர்களுக்கு விருதுகளை வழங்கினார். கள்ளக்குறிச்சி கடலூர் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் பெற்று தருவது உள்ளிட்ட. சங்க நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மூத்த செய்தியாளர் பச்சையா பிள்ளை அவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு சிறந்த பத்திரிக்கையாளர் விருதும் அதேபோல் உளுந்தூர்பேட்டை செய்தியாளர் ரமேஷ்பாபு அவர்களுக்கும். தங்க.முருகன் மற்றும் முத்துக்குமார் ஆகியோருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த பத்திரிகையாளர் விருதும் மூத்த பத்திரிகயாளர் அனைத்து இந்திய பத்திரிக்கைஆசிரியர் & வெளியீட்டாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஜோதி நரசிம்மன் அவர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான ஊடக அறம் போற்றும் உத்தமர் விருதும் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் ரமேஷ்பாபு அவர்களுக்கு கூடுதலாக மாநில துணைச் செயலாளர் பொறுப்பும் பச்சையா பிள்ளை அவர்களுக்கு மாநில துணைத் தலைவர் பொறுப்பும் தேசிய தலைவர் டாக்டர் எஸ். ராஜேந்திரன் வழங்கி சிறப்பித்தார். மேலும்விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன்,சரவணன்
கடலூர் மாவட்ட தலைவர் ஷேக் நூர்தின்அருண்குமார்சுதாகர் ஸ்டீல் ரவி .சட்ட ஆலோசர்கள் பிரபாகரன், முருகன், கமலக்கண்ணன் ,ராஜா விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். கூட்டத்தில் பத்திரிக்கையாளர் இயற்கை மற்றும் விபத்து மரணம் தொடர்பாக உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்குதேசியத் தலைவர் ராஜேந்திரன் ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கும் நிகழ்வுகளை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.