வீடு புகுந்து 15 பவுன் நகை திருட்டு..வள்ளியூரில் பரபரப்பு!

Loading

உறவினர் வீட்டு கோவில் திருவிழாவுக்கு சென்ற இடத்தில வீட்டில் இருந்த 15 பவுன் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத். இவர் மதுரையில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி கிருஷ்ணவேணி, இவர்களுக்கு 1 குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று வினோத் மனைவி கிருஷ்ண வேணி வள்ளியூர் அருகே உள்ள ஊத்தடி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அம்மன் கோவில் திருவிழா பார்ப்பதற்காக பெருங்குடியில் இருந்து நேற்று தனது குழந்தையுடன் வந்துள்ளார்.

அப்போது இரவில் கோவிலுக்கு சென்று கொடை பார்த்துவிட்டு வீட்டின் முதல் மாடியில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார் கிருஷ்ண வேணி.

அப்போது இன்று அதிகாலையில் வீட்டுக்குள் ஏறி குதித்த மர்ம நபர் ஒருவர் கிருஷ்ண வேணியின் கழுத்தில் கிடந்த சுமார் 3 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றுள்ளார்.இதில் பாதி செயின் மர்ம நபரின் கையில் சிக்கியது.

உடனே மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். உடனடியாக கிருஷ்ணவேணி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து பார்த்தனர் .அப்போது வீட்டின் முதல் தளத்தில் இருந்த பீரோவில் கிருஷ்ண வேனி வைத்திருந்த சுமார் 12 பவுன் நகை மயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்,

இதையடுத்து கிருஷ்ணவேணி வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காற்றுக்காக கிருஷ்ணவேணி வீட்டின் கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர் அறிந்து நகையை பறித்துச்சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே அந்த பகுதியில் உள்ளி சி.சி.டி.வி. காமிராக்களை இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து துணிகர திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

0Shares